மே 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 4 ஆம் திகதி வரையான கிழமையில் அமெரிக்கா மொத்தம் 6.6 மில்லியன் தொழில்களை இழந்துள்ளது. விமான சேவைகள், உணவகங்கள், விடுதிகள், தொழிச்சாலைகள், அலுவலகங்கள் என்பன தமது பணியாளர்களை நீக்கியமை இந்த பாரிய அளவிலான தொழில் இழப்புக்கு காரணம்.
.
கடந்த கிழமைக்கு முன்னைய கிழமை அமெரிக்கா 6.7 மில்லியன் வேலைகளை இழந்து இருந்தது. அதற்கு முன்னைய கிழமை 3.3 மில்லியன் வேலைகளை இழந்து இருந்தது.அதனால் கடந்த 3 கிழமைகளில் அமெரிக்கா சுமார் 16.8 மில்லோன் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது.
.
கடந்த மூன்று கிழமைகளுக்கு முன் அமெரிக்கா பெரும் தொகை வேலைகளை இழந்தது 2009 ஆம் ஆண்டிலேயே. அப்போது 665,000 (0.665 மில்லியன்) வேலைகளை மட்டுமே இழந்து இருந்தது.
.
கடந்த 3 கிழமைகளில் காலிஃபோர்னியா மாநிலம் மொத்தம் 2.170 மில்லியன் வேலைகளை இழந்து உள்ளது. பென்சில்வேனியா மாநிலம் மொத்தம் 1.065 மில்லின் தொழில்களை இழந்து உள்ளது. Michigan மாநிலம் 0.817 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. நியூ யார்க் மாநிலம் 0.791 மில்லியன் தொழில்களை இழந்து உள்ளது. ரெக்சாஸ் மாநிலம் 0.745 மில்லியன் தொழில்களை இழந்துள்ளது.
.
அமெரிக்க அரசு $2.2 டிரில்லியன் பணத்தை பொருளாதாரத்துள் செலுத்த இணங்கி இருந்தும் மக்களை தமது தொழில்களை இழப்பது குறையவில்லை.
.