பதவி விலக்கப்பட்ட கப்பல் அதிகாரிக்கும் கொரோனா

USS_Theodore_Roosevelt

USS Theodore Roosevelt என்ற அமெரிக்காவின் விமானம் தாங்கி யுத்த கப்பலின் தலைமை அதிகாரியாக பணியாற்றிய commander Captain Brett Crozier என்பவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றி உள்ளதாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து commander பதவி பறிக்கப்பட முன்னேரேயே அவரிடம் வரைஸ் தொற்றியதற்கான அறிகுறி இருந்துள்ளது.
.
Commander தனது விமானம் தாங்கி கப்பலில் சுமார் 100 அமெரிக்க கடல் படையினர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதை பென்ரகானுக்கு அறிவித்து இருந்தும் முதலில் பென்ரகன் நடவடிக்கைகள் எதையும் எடுத்திருக்கவில்லை.
.
அந்நிலையில் இந்த செய்தி The San Francisco Chronicle என்ற பத்திரிகையில் வெளிவந்து உள்ளது. இந்த செய்தியை அவ்வாறு பத்திரிகைக்கு வெளியிட்டது எவர் என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் ரம்ப் அரசு commander மீதே சந்தேகம் கொண்டது. அதனால் அவரது commander பதவி பறிக்கப்பட்டு உள்ளார்.
.
இந்நிலையிலேயே அந்த commander பதவி பறிக்கப்படுவதற்கு முன்னரே கொரோனா தொற்றுக்கு உள்ளாகியது தெரிய வந்துள்ளது.
.
அணு வலுவில் (nuclear) இயங்கும் இந்த விமானம் தாங்கி Guam தீவு பகுதியில் யுத்தத்துக்கு தயார் நிலையில் உள்ளது (deployed அல்லது combat-ready) என்று கணிக்கப்படாலும், அது தற்போது சேவையில் இல்லை.
.