அஸ்ரெலியாவில் (Australia) தற்போது தங்கி இருக்கும் சுமார் 2.71 மில்லியன் வெளிநாட்டவரை விரைவாக அங்கிருந்து வெளியேறுமாறு அஸ்ரெலியா கூறியுள்ளது. ஆனால் வைத்திய சேவை மற்றும் உணவு உற்பத்தி சேவைகளில் பணியாற்றுவோர் தொடர்ந்தும் அஸ்ரெலியாவில் தங்கி இருக்கலாம்.
.
இந்த 2.71 மில்லியன் வெளிநாட்டவருள் 565,000 மாணவ விசா கொண்டோர், 203,000 உல்லாச பயண விசா கொண்டோர், வேலைவாய்ப்பு விசா கொண்டோர் ஆகியோரும் அடங்குவர்.
.
அவ்வாறு வெளியேற முடியாதோர் குறைந்தது அடுத்த 6 மாத காலத்துக்கு உதவிகள் எதுவும் இன்றி தமது பொறுப்பில் இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.
.
வரும் காலங்களில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சி அடைந்து, வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்து இருக்கும் என்று அஸ்ரெலிய அரசு கூறியுள்ளது.
.
தற்போது அங்கு பயிலும் வெளிநாட்டு 565,000 மாணவர்கள் சுமார் U$ 19.4 பில்லியன் வருமானத்தை அஸ்ரெலியாவுக்கு வழங்குகின்றனர்.
.