Tokyo 2020 ஒலிம்பிக் பின் தள்ளப்பட்டது

Olympics

வரும் ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட இருந்த Tokyo 2020 ஒலிம்பிக் போட்டிகள் திட்டமிட்டபடி ஜூலை 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்படாது. பதிலாக இந்த போட்டிகள் 2021 ஆம் ஆண்டு கோடை காலத்துக்கு முன்னரான காலத்தில் இடம்பெறும் என்று தற்போது கூறப்பட்டுள்ளது.
.
கொரோனா வைரஸ் காரணமாக போட்டிகளை பின்தள்ளும் ஜப்பானின் விருப்பத்தை ஒலிம்பிக் அமைப்பு ஏற்றுக்கொண்டு இந்த பின்தள்ளலை உறுதி செய்துள்ளது. 2021 ஆண்டில் இடம்பெற்றாலும் இந்த போட்டி Tokyo 2020 என்றே அழைக்கப்படும்.
.
மேற்படி அறிவிப்புக்கு முன்னரே கனடா ஜூலை Tokoyo 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு கொள்ளாது என்று கூறி இருந்தது.
.
ஒலிம்பிக்கின் 124 வருட வரலாற்றில் இதுவரை என்றைக்குமே போட்டிகள் பின்தள்ளப்பட்டு இருக்கவில்லை. ஆனால் முதலாம், இரண்டாம் உலக யுத்தங்கள் காரணமாக 1916, 1940, 1944 ஆம் ஆண்டுகளில் போட்டிகள் நிறுத்தப்பட்டு இருந்தன.
.
அதேவேளை rugby விளையாட்டின் இந்த ஆண்டுக்கான Six Nation போட்டிகளும் பின்தள்ளப்பட்டு உள்ளன.
.
Euro 2020 கால்பந்தாட்ட போட்டிகளும் 2021 ஆம் ஆண்டு கோடைகாலத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது.
.
Monaco Grand Prix கார் ஓட்டப்போட்டி நிறுத்தப்பட்டு, ஏனைய Formula 1 கார் ஓட்ப்போட்டிகள் பின்தள்ளப்பட்டு உள்ளன.
.
ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி இடம்பெறவிருந்த London Marathon ஓட்டப்போட்டி அக்டோபர் 4 ஆம் திகதிக்கு பின்தள்ளப்பட்டு உள்ளது.
.
Golf விளையாட்டின் Masters மற்றும் PGA போட்டிகளும் பின் அறிவித்தல் வரை பின்தள்ளப்பட்டு உள்ளன.
.
French Open என்ற tennis போட்டிகள் செப்டம்பர் மாதத்துக்கு பின்தள்ளப்பட்டு உள்ளன.
.