கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள தமது நாட்டு பொருளாதாரங்களை மீட்க அமெரிக்கா $2.5 டிரில்லியன் ($2,500 பில்லியன்) முதலீடுகள், கடன்கள் (stimulus package) என்பவற்றை செய்ய முனைகிறது. ஆனாலும் இந்த விசயம் Democratic மற்றும் Republican கட்சி உறுப்பினர்களிடையே வாதங்களில் உள்ளது.
.
வேலைவாய்ப்பை இழக்கும் மக்களுக்கே பணம் செல்லவேண்டும் என்று Democratic கட்சினர் வாதாட, விமான சேவை நிறுவனங்கள் போன்றனவும் கடன் வசதிகளை அடைய வேண்டும் என்று Republican கட்சினர் வாதிடுகின்றனர்.
.
அதேவேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள தனது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப சீனா $ சுமார் $7 டிரில்லியன் முதலீடுகளையும், கடன்களையும் செய்யவுள்ளது.
.
China Economic Weekly தெரிவித்த செய்திப்படி சீனாவின் 31 மாநிலங்களில், 25 மாநிலங்கள் மேற்படி பொருளாதார மீட்சியில் பங்குகொள்ளவுள்ளன.
.
சீனாவின் சுமார் 22,000 புதிய திட்டங்களுள் புதிய கட்டுமானங்கள், 5G தொலைத்தொடர்பு சேவை திட்டங்கள், artificial intelelligence என்பனவும் அடங்கும்.
.
புதிதாக கட்டப்படவுள்ள மேற்படி திட்டங்களுள் பல நிலக்கரியில் (coal) இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களும் அடங்கும். அவ்வாறு சீனா தொடர்ந்தும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களை கட்டுவதை green house ஆதரவாளர் விரும்பவில்லை.
.