இந்திய YES Bank காலாண்டு நட்டம் $2.5 பில்லியன்

YES_Bank

இந்தியாவின் பெரியதோர் தனியார் வங்கியான YES Bank கடந்த காலாண்டில் $2.5 பில்லியன் நட்டத்தில் இயங்கி உள்ளது. தற்போது இந்த வங்கி ஊழல் காரணமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.
.
YES Bank நம்பிக்கை அற்றவர்களுக்கு பெரும் கடன்களை வழங்கி இருந்தது. அவ்வாறு கடன் பெற்றோர் கடனை மீண்டும் அடைக்காது தப்பிவிட்டனர். அதனால் வங்கி அதில் தமது வைப்பை செய்தோருக்கு அவர்களின் பணத்தை திருப்பி வழங்க முடியாது உள்ளது.
.
நிலைமையை அறிந்த இந்தியாவின் Reserve Bank of India இந்த வங்கியின் தலைமைகளை (board of directors) கலைத்து, இந்த வங்கியை உருவாக்கிய Rana Kapoor (billionaire) என்பவரை கைதும் செய்துள்ளது. இவர் வங்கி கடனை அடைக்க தவறியோரிடம் இலஞ்சம் பெற்றதாக கூறப்பட்டுள்ளது.
.
இந்த வங்கியில் பணத்தை வைப்பு செய்தோர் தமது பணத்தின் சிறு தொகைகளை (Rs 50,000) மட்டுமே தற்போதைக்கு மீள பெற முடியும்.
.
மீளப்பெறல் தொகை கட்டுப்பாடு நிறுத்தப்படும்போது கணக்கு வைத்திருப்போர் தமது மொத்த பணத்தையும் இந்த வங்கியில் இருந்த எடுக்கக்கூடும் என்றும் கருதப்படுகிறது. அவ்வாறு நடைபெறின் இந்த வங்கிக்கு எதிர்காலம் இல்லாது போகும்.
.