உலகம் எங்கும் மறிக்கப்படும் குடிவரவுகள்

Coronavirus

வேகமான கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகம் எங்கும் குடிவரவுகள் மறிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக விமான நிலையங்கள் மூலமான குடிவரவுகள் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.
.
ஐரோப்பாவில் இருந்தன விமான வரவுகளை வெள்ளி முதல் அமெரிக்கா தடை செய்துள்ளது. பாரிய அளவிலான விமான போக்குவரத்தை கொண்ட வடஅமெரிக்கா-ஐரோப்பா விமான பயணங்கள் பயணிகள் மத்தியில் பெரும் இடரை தோற்றுவித்து உள்ளன.
.
அமெரிக்காவின் Dallas, Chicago போன்ற விமான நிலையைகளை இறுதி நேரத்தில் அடைந்த ஐரோப்பிய விமான பயணிகள் குடிவரவு சோதனைகளுக்கு (customs) 5 அல்லது 6 மணித்தியாலங்கள் செலவழிக்க வேண்டியிருந்தது. அத்துடன் தேங்கிய பயணிகள் காணரமாக பயணிகள் மிக நெருக்கடியாக கூடி நின்றனர். தமக்கு ஏற்கனவே கொரோனா தோன்றி இருக்காது விடினும், மேற்படி சனம் நிறைந்த நெருக்கடிகளுக்குள் நிச்சயமாக தெற்றி இருக்கும் என்று சில பயணிகள் நகைப்பாக கூறி உள்ளனர்.
.
அமெரிக்காவில் தற்போது 2,900 பேர் கொரோனா தொற்றியமை அறியப்பட்டு உள்ளது. மொத்தம் 57 பேர் பலியாகியும் உள்ளனர்.
.
இன்று மட்டும் இத்தாலியில் 368 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அங்கு கொரோனாவுக்கு பலியானோர் தொகை 1,800 ஆக உள்ளது. Lombardy என்ற பகுதியே மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.
.
இத்தாலிக்கு அடுத்து ஐரோப்பாவில் ஸ்பெயின் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு சுமார் 47 மில்லியன் மக்களை அவசியம் இன்றி வீடடை விட்டு வெளியேற வேண்டாம் அன்று கூறப்பட்டுள்ளது. மேற்படி தடையை கண்காணிக்க போலீசார் drone களை பயன்படுத்துகின்றனர்.
.
பிரித்தானியாவில் கொரோனாவுக்கு இதுவரை 35 பலியாகி உள்ளனர். அத்துடன் 1,372 பேர் கொரோன தொற்றியும் உள்ளனர்.
.
சுவிஸில் மட்டும் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோன தொற்றிக்கொண்டோர் தொகை 800 ஆள் அதிகரித்துள்ளது. அங்கு தற்போது மொத்தம் 2,200 பேர் கொரோன தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
.
தென்னாபிரிக்கா கொரோனா தொற்றியுள்ள நாடுகளில் இருந்து பயணிகளை வருவதை மார்ச் 18 ஆம் திகதி முதல் தடை செய்கிறது. கடந்த 20 நாட்களுக்குள் மேற்படி நாடுகளுக்கு பயணம் செய்தவர்களும் தடை செய்யப்பட்டு உள்ளனர்.
.