British Airways விரைவில் பெருமளவு பணியாளரை நீக்கும்

BritishAirways
கொரோனா வைரஸ் காரணமாக விமான சேவை நிறுவனங்களும், உல்லாசப்பயண சேவை நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. பல விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இலாபத்தில் இயங்க முடியாது தவிப்பன. அவர்களின் தற்போதைய நிலைமை பாரதூரமானது.
.
பிரித்தானியாவின் British Airways தமது பணியாளர்களுக்கு ஏற்கனவே தொழில் இழப்புகள் (lay off) வருகின்றன என தனது ஊழியர்களுக்கு கூறி உள்ளது. இந்த தொழில் இழப்புகள் தற்காலிகமானதாக இருக்கலாம் அல்லது நிரந்தரமானது இருக்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
விமான சேவை நிறுவனங்கள் சுமார் $113 பில்லியன் வருமானத்தை இழக்கும் என்று International Air Transport (IAT) கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தது. அதற்கு பின்னரே ரம்ப் அரசு ஐரோப்பிய போக்குவரத்து தடையை அறிவித்து இருந்தது.
.
அமெரிக்காவின் Delta விமான சேவை தமது சேவைகளை 40% ஆல் குறைக்க உள்ளதாக கூறியுள்ளது. அதற்கு ஏற்ப சுமார் 300 விமானங்களை நிறுத்தி வைக்க உள்ளது.
.
American Airlines தனது சேவையை குறைந்தது 34% ஆல் குறைக்க உள்ளது.
.
சிங்கப்பூர் விமான சேவையும், அதன் கிளை விமான சேவைகளும் சுமார் 19% சேவைகளை நிறுத்தி உள்ளன.
.
Hong Kong ஐ தளமாக கொண்ட Cathy Pacific முன்னர் நாள் ஒன்றில் சுமார் 90,000 பயணங்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 11,000 பயணங்களை மட்டுமே விற்பனை செய்கிறது. அதனால் 238 விமானங்களை கொண்ட Cathy சுமார் 150 விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது.
.