அனைத்து விசாக்களையும் நிறுத்தியது இந்தியா

Coronavirus

கொரோனா காரணமாக ஏறக்குறைய அணைத்து நாட்டவர்களுக்கான விசாக்களையும் இந்தியா 13 ஆம் திகதி முதல் இரத்து செய்யவுள்ளது. அத்துடன் பர்மாவுடனான எல்லைகளையும் மூடியுள்ளது இந்தியா. இந்தியாவில் கொரோனா பாதிப்பை அடைந்தோர் தொகை அதிகரிப்பதே இந்தியாவின் இந்த கடும் நடவடிக்கைக்கு காரணம்.
.
மார்ச் 13 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் விசா தடை ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதிவரை நடைமுறையில் இருக்கும் என்றும் சுகாதார அமைச்சால் கூறப்பட்டுள்ளது.
.
Diplomatic, ஐ.நா. போன்ற விசேட விசாக்களை கொண்டோர் தொடர்ந்தும் இந்தியாவுள் நுழைய அனுமதிக்கப்படுவர்.
.
நேற்று செய்வாய்க்கிழமை பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து வரும் இந்தியர் அல்லாதோரை இந்தியா தடை செய்திருந்தது. சீனா, இத்தாலி, ஈரான், ஜப்பான், தென்கொரியா போன்ற நாட்டவர்கள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு உள்ளனர்.
.
வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் இந்தியர் அங்கு நுழைய அனுமதிக்கப்படுவர்.
.