கொழும்பில் விற்பனை செய்யப்படும் ஆடம்பர அடுக்குமாடிகளின் (luxury condo) விலை வீழ்ச்சி அடைவதாக தரவுகள் கூறுகின்றன. தேவைக்கு மிகையாக ஆடம்பர அடுக்குமாடிகளை கட்டுவதே விலை வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
.
புதிய வீடுகளின் விலைகள் குறைவதால் ஆடம்பர அடுக்குமாடிகளின் வாடகையும் குறைந்து வருகிறது. ஆடம்பர அடுக்குமாடிகளின் வாடகை சமீபத்தில் 30% ஆல் குறைந்து உள்ளது.
.
2014 முதல் 2017 வரையான காலத்தில் 52% ஆல் அதிகரித்திருந்த மாடிகளில் விலை, 2017 முதல் 2019 வரையான காலத்தில் 4% ஆல் குறைந்து உள்ளது.
.
கடந்த 10 வருடங்களுள் 7,600 ஆடம்பர மாடி வீடுகள் கொழும்பில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 14,300 மாடி வீடுகள் அங்கு கட்டப்பட்டு வருகின்றன. ஆனால் சுமார் 1,700 மாடிகளுக்கே சந்தை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
.
ITC என்ற நிறுவனம் கட்டிய Sapphire Residences என்ற 132 ஆடம்பர மாடி வீடுகளில் இதுவரை 6 மாடி வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டதாம்.
.
Colombo City Center அடுக்குமாடியில், 27 ஆம் தளத்தில் உள்ள இரண்டு அறைகள் கொண்ட வீடு ஒன்று $375,000 பெறுமதிக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை முன்னர் $420,000 ஆக இருந்தது. ஆனால் 4 அறைகள் கொண்ட Sapphire Residence வீடு ஒன்று $3.295 மில்லியனுக்கு ($3,295,000) விற்பனைக்கு உள்ளது.
.
இலங்கையில் அந்நியர் வீடு கொள்வனவு செய்யும்போது, அது பொதுவாக 99 வருட குத்தகையாகவே கருதப்படுகிறது.
.