கடந்த 4 நாட்களாக தொடரும் கலவரங்களுக்கு இதுவரை குறைந்தது 32 பேர் பலியாகியும், 200 பேர்வரை காயமடைந்தும் உள்ளனர். இஸ்லாமியருக்கு எதிராக வரையப்பட்ட புதிய Citizenship Amendment Act என்ற சட்டத்தை எதிர்த்தே இந்த ஆர்பாட்டங்கள் நிகழ்கின்றன.
.
அத்துடன் சிறிய Farukhiya Mosque உட்பட குறைந்தது 3 பள்ளிவாசல்களும் தீ மூட்டப்பட்டு உள்ளன. பொதுவாக கலவரங்கள் நகரின் வடகிழக்கு பகுதிகளிலேயே இடம்பெறுகின்றன. போலீசார் கலவரங்களை கண்டும் காணாமல் இருக்கின்றனர் அல்லது கலவரத்தில் ஈடுபடும் பா.ஜ. சார்பாக செயல்படுகின்றனர் என்று கூறப்படுகிறது.
.
கபில் மிஸ்ரா (Kapil Mishra) என்ற பா.ஜ. உறுப்பினர் கலவரங்களை ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ளார். 2013 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை Aam Aadmi Party உறுப்பினராக இருந்த இவர் கடந்த வருடமே பா.ஜ. கட்சிக்கு தாவி இருந்தார்.
.
மத்திய அரசு மிஸ்ராவின் செயல்கள் தண்டிக்காது இருப்பது அவமானம் என்கிறார் காங்கிரஸ் கட்சியின் பிரியங்க காந்தி.
.