இலங்கையர் ஜப்பானில் கள்ள கடனட்டை கொள்வனவு

Japan

இலங்கையரான 20 வயதுடைய பெர்னாண்டோ குருகுலசூரிய (Fernando Kurukulasuriya) என்பவர் ஜப்பானின் அசாதரண அளவில் எரிபொருளை ஒரு காலை கொள்வனவு செய்துள்ளார். ஆனால் இவர் இந்த கொள்வனவுக்கு பயன்படுத்திய கடனட்டை வேறு ஒருவருக்கு சொந்தமானது. அதனால் இவர் அந்நாட்டு பொலிஸாரால் ( Tokyo Metropolitan Police) கைது செய்யப்பட்டு உள்ளார்.
.
Ibaraki என்ற பகுதியில் அந்நிய நாட்டவர் ஒருவர் அதிகாலை ஒன்றில் 40,000 லீட்டர் எரிபொருளை கொள்வனவு செய்வதில் சந்தேகம் கொண்ட எரிபொருள் நிலைய ஊழியர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மேற்படி இலங்கையர் கைது செய்யப்பட்டு உள்ளார். பல கொள்கலன்களை பயன்படுத்தியே இந்த பாரிய கொள்வனவு செய்யப்பட்டு உள்ளது.
.
குருகுலசூரியவுடன் மேலும் இருவர் சந்தேக நபர்களாக ஜப்பான் பொலிஸாரால் பதியப்பட்டு உள்ளனர். இரண்டாம் நபர் தமது குற்றத்தை ஒத்துக்கொண்டாலும், மூன்றாம் நபர் குற்றத்தை மறுத்து வருகிறார்.
.
இவர்களே கடந்த அக்டோபர் மாதமும் இன்னோர் இடத்தில் 3,500 லீட்டர் எரிபொருளை கொள்வனவு செய்துள்ளனர் என்றும் ஜப்பான் போலீசார் கூறுகின்றனர்.
.