அமெரிக்காவுடனான இராணுவ உறவை துண்டிக்க உள்ளதாக பிலிப்பீன் (Philippines) இன்று அறிவித்து உள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான Visiting Forces Agreement (VFA) என்ற உடன்படிக்கையையே பிலிப்பீன் துண்டிக்க உள்ளது. அந்த அறிவிப்பை பெற்றுக்கொண்டதை அமெரிக்காவும் கூறியுள்ளது.
.
பிலிப்பீனின் அமெரிக்க எதிர்ப்பு ஜனாதிபதியான Rodrigo Duterte சீனாவுடன் நெருங்கிய உறவை கொண்டிருக்க விரும்புபவர்.
.
1999 ஆம் ஆண்டு செய்துகொள்ளப்பட்ட மேற்படி VFA உடன்படிக்கை அமெரிக்க படையினர் கடவுச்சீட்டு, விசா இன்றி பிலிப்பீன் உள் நுழைய அனுமதி வழங்குகிறது.
.
கடந்த மாதம் Ronald dela Rosa என்ற முன்னாள் பிலிப்பீன் போலீஸ் அதிகாரிக்கு அமெரிக்கா விசா வழங்க மறுத்தமையே பிலிப்பீனின் இந்த பலதிலடிக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
.
Rosa பிலிப்பீனில் இடம்பெற்ற பல கொலைகளுக்கு காரணமானவர் என்று அமெரிக்கா கருதுகிறது.
.
2016 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையான காலத்தில் அமெரிக்கா பிலிப்பீனுக்கு சுமார் $550 மில்லியன் உதவி வழங்கி இருந்தது.
.
1946 ஆம் ஆண்டுவரை பிலிப்பீன் அமெரிக்காவின் உடமையாக இருந்தது.
.