இன்றி சனிக்கிழமை Jakraphanth Thomma என்ற தாய்லாந்து இராணுவத்தினர் ஒருவரின் சூட்டுக்கு குறைந்தது 26 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் சுமார் 57 பேர் காயமடைந்தும் உள்ளனர். Nakhon Ratchasima என்ற நகரிலேயே இந்த சம்பவம் நிகழ்துள்ளது. அதிகமானோர் Terminal 21 என்ற சந்தை பகுதியிலேயே பலியாகி உள்ளனர்.
.
துப்பாக்கிதாரியின் சூட்டுக்கு முதலில் பலியானது கேணல் Anantharot Krasae என்ற அவரது கட்டளை அதிகாரியே. தனது சூட்டு சம்பவத்தை துப்பாக்கிதாரி Internet லும் வெளியிட்டு உள்ளார். பின்னர் படையினர் அவரை சுட்டு கொன்றுள்ளனர்.
.
கட்டளை அதிகாரியை சுட்டபின், இராணவ வாகனம் ஒன்றை எடுத்து சென்ற 32 வயது துப்பாக்கிதாரி பொதுமக்களை சுட ஆரம்பித்து உள்ளார். இறுதியில் Terminal 21 என்ற shopping mall ஐ அடைந்துள்ளார்.
.
துப்பாக்கிதாரி Suatham Phithak என்ற தான் நிலைகொண்டிருந்த இராணுவ தளத்திலேயே தனது தாக்குதலை ஆரம்பித்து உள்ளார்.
.