தமக்கு பிள்ளை இல்லாத பிரித்தானியாவின் Hanwell நகர வாசிகளான Arti Dhir, Kaval Raijada ஆகிய இருவரும் இந்தியா சென்று குயாராத் பகுதியில் வாழ்ந்த Gobal Sejani என்ற பையனை 2015 ஆம் ஆண்டில் தத்து எடுத்து இருந்தனர்.
.
பையன் விசாவுக்கு காத்திருக்கும் காலத்தில் தத்தெடுத்த பெற்றார் மீண்டும் பிரித்தானியா சென்றிருந்தனர். அத்துடன் பையன் பெயரில் 150,000 பௌண்ட்ஸ் பெறுமதியான காப்புறுதியும் பெற்றிருந்தனர்.
.
அந்நிலையில், 2017 ஆம் ஆண்டில், Gobal இனம் தெரியாதோர் இருவரால் கொலை செய்யப்பட்டான். அத்துடன் அவனுக்கு உதவ முற்பட்ட உறவினன் ஒருவனும் கொலை செய்யப்பட்டான்.
.
இந்த சம்பவத்தை விசாரித்த இந்திய போலீசார் காப்புறுதி பணத்துக்காக தத்தெடுத்த பெற்றோரே வாடகைக்கு அமர்த்திய கொலையாளிகள் மூலம் இந்த கொலையை செய்தனர் என்று கண்டுள்ளனர்.
.
கொலையாளிகளுக்கு பிரித்தானியர் பணம் வழங்கிய ஆதராத்தையும் போலீசார் முன்வைத்துள்ளார். கொலையாளிகளும் தமது பங்கை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
.
தத்தெடுத்த பெற்றார் மீது வழக்கு தொடரும் நோக்கில் அவர்களை இந்தியாவுக்கு நாடுகடத்தும்படி இந்தியா கேட்டது. ஆனால் பிரித்தானிய நீதிமன்றம் அவர்களை நாடுகடத்த மறுத்துள்ளது. அதனால் தத்தெடுத்த பெற்றார் பிரித்தானியாவில் சுதந்திரமாக உள்ளனர்.
.