2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையான காலத்தில் SriLankan என்ற இலங்கை விமான சேவை ஐரோப்பாவின் Airbus விமான தயாரிப்பு நிறுவனத்தின் விமானங்கள் சிலவற்றை கொள்வனவு செய்திருந்தது. அந்த கொள்வனவை உறுதிப்படுத்த Airbus சட்டவிரோதமாக இலஞ்சம் வழங்கி உள்ளது என்கின்றன அமெரிக்க, ஐரோப்பிய விசாரணைகள். அதனால் அந்த விசயத்தை விசாரணை செய்யவேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டு உள்ளது.
.
இந்த இலஞ்சம் தொடர்பான அமெரிக்காவினதும், ஐரோப்பாவினதும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்ட Airbus விமான தயாரிப்பு நிறுவனம் $4 பில்லின் தண்டம் செலுத்த இங்கி உள்ளது.
.
பிரித்தானியாவின் Serious Fraud Office (SFO) தெரிவித்த கூற்றுப்படி SriLankan விமான சேவை அதிகாரி ஒருவரின் மனைவியை இடைத்தரகராக வாடகைக்கு அமர்த்தி, அவரின் பெயர் மற்றும் பால் (gender) ஆகியவற்றை மாற்றி Airbus 350 வகை விமானங்களை விற்பனையை செய்துள்ளது. அதற்காக $2 மில்லியன் சன்மானத்தையும் Airbus செலுத்தி உள்ளது.
.
அத்துடன் Brunei யில் பதிவு செய்யப்பட்ட சந்தேகத்துக்கு இடமான இடைத்தரகர் நிறுவனம் ஒன்றுக்கும் $16.84 மில்லியன் தரகு கூலி வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
.
SriLankan விமான சேவையுடன் வேறுசில விமான சேவைகளுக்கான விமான விற்பனைகளும் இந்த அமெரிக்கமற்றும் ஐரோப்பிய விசாணைகளுக்குள் அடங்கும்.
.