சோமாலியா, பாகிஸ்தான் வெட்டுக்கிளி முற்றுகையில்

Locust

ஆபிரிக்க நாடான சோமாலியாவும், பாகிஸ்தானும் வெட்டுக்கிளி (locust, ஒரு வகை grasshopper) பாதிப்பால் அவசரகால நிலையை அறிவித்து உள்ளன.
.
சோமாலியாவில் படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் அங்கு ஏற்கனவே அருகி உள்ள பயிரினங்களை அழித்து வருகின்றன. கடந்த 25 வருட காலத்தில் கண்டிராத அளவு வெட்டுக்கிளிகள் அங்கு படையெடுத்து உள்ளன.
.
சனிக்கிழமை பாகிஸ்தானும் வெட்டுக்கிளி அவசரகால நிலையை அறிவித்து உள்ளது. பாகிஸ்தானில் உள்ள வெட்டுக்கிளிகள் ஈரானில் இருந்து பரம்பியவை. பாகிஸ்தானில் இவை பருத்தி, தானியம், சோளம் போன்ற பயிரினங்களை அழித்து வருகின்றன. பாகிஸ்தான் இவ்வகை வெட்டுக்கிளி மூலமான அழிவை இதற்கு முன் 1993 ஆம் ஆண்டிலேயே கொண்டிருந்தது.
.
அண்டை நாடான கென்யாவில் (Kenya) கடந்த 70 வருடகாலத்தில் கண்டிராத அளவு வெட்டுக்கிளிகள் படையெடுத்து உள்ளன என்கிறது ஐ.நா. வின் Food and Agriculture Organization).
.
வெட்டுக்கிளிகள் நாள் ஒன்றில் சுமார் 150 km தூரத்தை பயணிக்க வல்லன. சில நாடுகள் விமானங்கள் மூலம் நாசினிகள் வீசி வெட்டுக்கிளிகளை அழித்து வருகின்றன.
.