அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளரும் Arizona மாநிலத்தின் senator பதவியில் உள்ளவருமாகிய John McCain திங்கள்கிழமை சிரியாவில் அந்நாட்டு அரசுக்கு எதிராக போராடும் ஆயுததாரிகளை சந்திக்க சென்றுள்ளார். இவர் குறிப்பாக அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுக்கு ஆதரவான குழுக்களை மட்டுமே சந்தித்துள்ளார். குறிப்பாக ஜெனரல் Salim Idris என்றபவரை McCain சந்தித்திளார்.
2011 ஆம் ஆண்டில் லிபியாவில் நடைபெற்ற கடாபிக்கு எதிரான கிளர்ச்சிகளின்போதும் McCain அங்கு சென்று கிளர்ச்சிக்குளுக்களுக்கு உதவி வழங்கியிருந்தார்.
லிபியா, சிரியா போன்ற நாடுகளில் வெறும் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்த வன்முறைகளில் ஈடுபடும் கிளர்ச்சியாளரை ஆதரிக்கும் McCain மறுபுறம் பாலஸ்தீனியர் போராடுவதை ஆதரிப்பது இல்லை. Palestinian Anti-Terrorism Act of 2006 என்ற அமெரிக்க சட்டத்தை முன்னின்று நடைமுறைப்படுத்திய McCain, Gazaவில் உள்ள ஹமாஸ் போன்ற இயக்கங்கள் வன்முறைகளை கைவிடவேண்டும் என்பதில் திடமாக உள்ளவர்.
அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளராக இருந்தபோது தான் ஜனாதிபதியானால் இஸ்ரேலின் விரோதிகளான சிரியா, ஈரான், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்றோரை தனிமைப்படுத்த நடவடிக்கைகள் எடுப்பேன் என்று கூறியிருந்தார். அவ்வாறாயின் திங்கள்கிழமை அவர் செய்த பயணத்தின் நோக்கம் சிரியா மக்களுக்கு உதவவா அல்லது இஸ்ரேலின் எதிரிகளை அழிக்கவா?