பலஸ்தீனர்க்கு ரம்ப் வழங்கும் இஸ்ரேலின் தீர்வு

Trump_plan

இஸ்ரேல் பிரதமர் Netanyahu வுடன் இணைந்து பலஸ்தீனருக்கான தீர்வு ஒன்றை அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று வெளியிட்டு உள்ளார். இந்த தீர்வு ரம்பின் மருமகன் (ஒரு யூதர்) இஸ்ரவேலுடன் இணைந்து தயாரித்த ஒருபக்க தீர்வே. பலஸ்தீன அதிகாரிகள் எவரும் இந்த தீர்வு வரைபில் பங்கு கொண்டிருக்கவில்லை.
.
ஒருபக்க நலன்களை கொண்ட இந்த தீர்வை பலஸ்தீன அதிகாரிகள் உடனடியாக நிராகரித்து உள்ளனர்.
.
ரம்ப் முன்வைத்த இன்றைய தீர்வு இஸ்ரேல் இன்றுவரை கைக்கொண்ட அனைத்து பலஸ்தீனர் நிலங்களையும் இஸ்ரேலுக்கு வழங்குகிறது. எஞ்சி உள்ள குறுக்கும் மறுக்குமாக துண்டாடப்பட்ட நிலமே பலஸ்தீனாருக்கு உரிமை ஆகும். ஜெருசலேமேமும் இஸ்ரேல் உரிமை ஆகும்.
.
ஓமான், பஹ்ரைன், UAE ஆகிய நாடுகள் இந்த தேர்வுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன என்கிறார் ரம்ப்.
.
ஜெர்மனியின் வெளிநாட்டு அமைச்சர் இந்த ஒருபக்க தீர்வுக்கு பதிலாக இஸ்ரேலும், பலஸ்தீனரும் இனைந்து எடுக்கும் தீர்வையே விரும்புவதாக கூறி உள்ளார்.
.
ரம்பின் இன்றைய தீர்வு இஸ்ரேல் அரசியலில் அல்லலுறும் தனது நண்பன் Netanyahu வுக்கு வழங்கப்படும் அரசியல் ஆதரவே என்றும் கருதப்படுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் Netanyahu ஆட்சி அமைக்க போதுமானது அற்ற வெற்றியை கொண்டிருந்தார். அதனால் மூன்றாவது தேர்தல் மார்ச் மாதம் நிகழவுள்ளது.
.