ஜப்பான் நாட்டின் இலத்திரனியல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான SHARP இன் 2012 ஆம் ஆண்டுக்கான நிகர நட்டம் US $5.4 பில்லியன் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் 2011 ஆண்டுக்கான நிகர நட்டம் US $4.7 பில்லியன் ஆக இருந்ததுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.
1912 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம் முதலில் Ever-Sharp என்ற mechanical pencil களை தயாரித்ததால் SHARP என்ற பெயரை கொண்டிருந்தது. அண்மை காலங்களில் cell phone, LCD panel, calculators, printers, தொலைக்காட்சிகள் என பலதரப்பட்ட பொருட்களை தமது SHARP வர்த்தகத்திலும் அத்துடன் Apple போன்ற நிறுவனங்களுக்கும் தயாரித்து வந்தது.
2011 ஆம் ஆண்டளவில் இது உலகெங்கும் சுமார் 55,000 ஊழியர்களை கொண்டிருந்தது. பின்னர் பாரிய அளவில் ஊழியர் எண்ணிக்கையை குறைத்து வந்தது. மேலும் 10,000 வரை குறைக்கவுள்ளது.
இது அடுத்த வருடம் சிறிது இலாபம் காணலாம் என கணிப்பிடப்பட்டுள்ளது.