இந்தியாவில் தகர்க்கப்படும் சட்டவிரோத அடுக்குமாடிகள்

The_H2O

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நான்கு புதிய அடுக்குமாடிகள் (high-rise apartments) அரசால் தகர்க்கப்பட்டு உள்ளன. கோச்சி பகுதியில் நேற்று 90 வீடுகளை கொண்ட The H2O Holy Faith என்ற 19 மாடி தகர்க்கப்பட்டு உள்ளது. அதன் பின்னர் Twin Towers என்ற அடுக்கு மாடியும் தகர்க்கப்பட்டு உள்ளது. மொத்தம் 40 வீடுகளை கொண்ட 17 அடுக்கு மாடியனா Golden Kayaloram இறுதியில் இன்று அழிக்கப்பட்டு உள்ளது.
.
மேற்படி அடுக்குமாடிகள் உரிய முறையில் அனுமதி பெறாது கட்டப்பட்டன என்கிறது Kerala Coastal Zone Management Authority (KCZMA). அத்துடன் மேற்படி மாடிகள் கட்டப்பட்ட கரையோர பகுதி பாதுகாக்கப்பட்ட இடம் என்றும் அங்கு கட்டுமானங்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளது.
.
உள்ளூர் அதிகாரி ஒருவரின் அனுமதியுடனேயே மேற்படி மாடிகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் அந்த உள்ளூர் அதிகாரியின் அனுமதி முறை அற்றது.
.
கடந்த மே மாதம் இந்திய நீதிமன்றம் மேற்படி மாடிகளை அழிக்க உத்தரவு வழங்கி உள்ளது. தனியார் ஏற்கனவே மாடிகளை கொள்வனவு செய்திருந்தாலும் அவற்றை அழிக்கும்படி நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த மாடிகள் வெள்ள நீரோட்டத்தை தடுப்பதாலேயே வெள்ள பாதிப்புக்கள் அதிகரித்து உள்ளதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
.
சிலர் மாடியில் இருந்து வெளியேற மறுக்க, அரசு நீர் மற்றும் மின் இணைப்புகளை துண்டித்து அவர்களை வெளியேற்றியது.
.
அந்த மாடிகளில் வசித்த ஒருவர் தனது வீட்டை (apartment) தான் $145,000 பெறுமதிக்கு கொள்வனவு செய்ததாக கூறியுள்ளார்.
.
கேரளா அரசு அழிக்கப்பட்ட வீடுகளின் பகுதி தொகையை வீட்டு உரிமையாளருக்கு வழங்கி உள்ளது.
.