லண்டன் நகரின் 2-8a Rutland Gate முகவரியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டை சீன செல்வந்தரான Cheung Chung Kiu கொள்வனவு செய்யவுள்ளார். மொத்தம் 45 அறைகளை கொண்ட இந்த வீட்டின் கொள்வனவு விலை £ 210 மில்லியன் (U$ 262 மில்லியன்).
.
அதன்படி பிரித்தானியாவில் மட்டுமன்றி, உலகத்திலேயே அதி கூடிய விலைக்கு கொள்வனவு செய்யப்படும் வீடு இதுவாகும். இதற்கு முன்னர் நியூ யார்க் நகரில் உள்ள அமெரிக்க வீடு ஒன்று $238 மில்லியன் விலைக்கு கொள்வனவு செய்யப்பட்டு இருந்தது.
.
இந்த வீடு மத்திய லண்டன் பகுதியில் விலை உயர்ந்த வீடுகளை கொண்ட Hyde Park பகுதியில் அமைத்துள்ளது. இது 7 மாடிகளையும், சுமார் 62,000 சதுர அடி பரப்பளவையும் கொண்டது. இதன் யன்னல்கள் துப்பாக்கி குண்டுகளால் உடைக்கப்பட முடியாதவை.
.
இந்த வீட்டை கொள்வனவு செய்யும் Cheung Chung Kiu, என்பவர் Forbes நிறுவன கணிப்பின்படி, உலக அளவில் 843 ஆவது செல்வந்தர்.
.
1830 ஆம் ஆண்டுகளில் நான்கு ஆடம்பர வீடுகளாக கட்டப்பட்ட இந்த வீட்டு தொகுதி 1980 ஆண்டு அளவில் இணைத்து ஒரு பெரிய ஆடம்பர வீடு ஆக்கப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் இந்த வீடு £ 300 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்திருந்தது. ஆனால் எவரும் அந்த விலைக்கு கொள்வனவு செய்யவில்லை. 2015 ஆம் ஆண்டில் இந்த வீட்டின் சந்தை பெறுமதி £140 மில்லியன் ஆக இருந்தது.
.
இந்த வீட்டை பல சிறிய ஆடம்பர வீடுகள் ஆக மாற்றி விற்பனை செய்தால், அவற்றை சுமார் $700 மில்லியன் பெறுமதிக்கு விற்பனை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
.
இந்த வீட்டின் தற்போதை உரிமையாளர் சவுதி அரச குடும்பத்தினர்.
.