சார்ள்ஸ், டயானா தம்பதிகளின் இரண்டாவது மகன் ஹரியும் (Prince Harry, வயது 35) அவரின் மனைவி Meghan னும் வடஅமெரிக்கா சென்று தனிக்குடித்தனம் செய்ய முனைகின்றனர். ஆனால் அந்த அறிவிப்பால் சினம் கொண்டுள்ளார் இராணி Elizabeth II.
.
ஹரி தம்பதி தாம் சுதந்திரமாக, சுயாதீன பொருளாதாரத்துன் (financially independent) வடஅமெரிக்காவில் வாழ முனைகின்றனர். அதற்கு ஏற்ப இராச குடும்ப கடமைகளில் இருந்து விலகவும் திட்டமிட்டு உள்ளனர். இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளார் இராணி.
.
இன்று வெள்ளிக்கிழமை மகன் சார்ள்ஸ், பேரர்கள் வில்லியம், ஹரி ஆகியோருடன் இராணி இந்த விசயம் தொடர்பாக கலந்துரையாடி உள்ளார். ஹரியின் தீர்மானத்தால் இராச குடும்பம் நொந்துள்ளது (hurt) என்றும் கூறப்பட்டு உள்ளது.
.
முன்னாள் நடிகையான ஹரியின் மனைவி Meghan (வயது 38) ஏற்கனவே கனடா சென்றுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
.
கடந்த நத்தார் பண்டிகை காலத்தில் ஹரி, Meghan, அவர்களின் குழைந்தை ஆகிய மூவரும் இராணி குடும்பத்துடன் இருந்திருக்கவில்லை. பதிலாக அவர்கள் வடஅமெரிக்காவிலேயே இருந்தனர்.
.