அமெரிக்க படைகளை ஈராக்கில் இருந்து வெளியேற்றினால் ஈராக் மீது அமெரிக்கா கடும் பொருளாதார தடைகளை விதிக்கும் என்று அமெரிக்க சனாதிபதி ரம்ப் இன்று கூறியுள்ளார்.
.
அத்துடன் ரம்பின் ஈராக் மீதான தடை ஈரான் மீதான தடையிலும் பல மடங்கு பெரியதாக இருக்கும் என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
.
நேற்று ஞாயிரு ஈராக்கின் பாராளுமன்றம் அமெரிக்க படைகளை ஈராக்கில் இருந்து வெளிற்றும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியதே ரம்பின் பொருளாதார தடை பயமுறுத்தலுக்கு காரணம்.
.
அமெரிக்கா உலகத்திலேயே மிக அதிக செலவிலான விமான படை தளத்தை ஈராக்கில் கட்டி உள்ளதாகவும், தம்மை வெளியேற்றின் அதற்கு ஈராக் பில்லியன் டாலர்கள் செலுத்த வேண்டும் என்றும் ரம்ப் கூறியுள்ளார்.
.
அதவேளை ஈரானின் பழம்பெரும் கலாச்சார நிலையங்களையும் தாக்கி அழிப்பேன் என்று ரம்ப் கூறியதும் மேற்கு நாடுகளிலும் விசனத்தை தோற்றுவித்து உள்ளது. 1954 ஆம் ஆண்டு மற்றும் 1972 ஆம் ஆண்டு ஐ,நா. விதிகளின்படி இவ்வகை நிலையங்களை தாக்குவது war crime ஆகும். அமெரிக்காவும் இந்த விதிமுறைகளில் கையொப்பம் இட்டுள்ளது.
.
ஈரானில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு உரிய Persepolis உட்பட பல பழம்பெரும் நிலையங்கள் உள்ளன.
.