வெள்ளிக்கிழமை ஈரான் ஜெனரல் காசெம் சுலேய்மானியை (Qasem Soleimani) ஈராக்கின் பக்தாத் (Baghdad) விமான நிலையம் அருகே ஏவுகணைகள் மூலம் படுகொலை செய்த காரணத்தால் அமெரிக்க படைகளை ஈராக்கில் இருந்து வெளியேற்ற ஈராக் பாராளுமன்றம் தீர்மானித்து உள்ளது. மேற்படி தாக்குதல் தொடர்பாக ஐ. நாவில் அமெரிக்காவுக்கு எதிராக குற்றசாட்டு ஒன்றையும் ஈராக் பதிவு செய்யவுள்ளது.
.
இன்று ஞாயிறு ஈராக் பாராளுமன்றில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 173 உறுப்பினர் அமெரிக்க இராணுவ வெளியேற்றத்துக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும்பாலும் சியா இஸ்லாமியர். மொத்தம் 329 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்துக்கு ஏனையோர் சமூகமளிக்கவில்லை. சமூகம் அளிக்காதோர் பெரும்பாலும் சுனி மற்றும் Kurdish உறுப்பினர். ஈரான் சியா இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு.
.
தாக்குதல் அன்று ஈராக்கின் பிரதமரை சந்திக்கவே Soleimani ஈராக் சென்றுள்ளார். சவுதி ஈரானுடன் கொண்டுள்ள முரண்பாடுகளை தணிக்கும் நோக்கில் ஈரானுக்கு அனுப்பிய கேள்விகளுக்கான ஈரானின் பதில்களை Soleimani ஈராக்கின் பிராமருக்கு அளிக்க இருந்தார் என்று ஈராக்கின் பிரதமர் கூறியுள்ளார்.
.
ISIS மீதான தமது நடவடிக்கைகளை தாம் உடனடியாக நிறுத்தி உள்ளதாக வாக்களிப்பை அறிந்த அமெரிக்கா வாக்களிப்புக்கு சற்று முன்னர் கூறியுள்ளது.
.
தற்போது சுமார் 5,200 அமெரிக்க படைகள் ஈராக்கில் உள்ளன. முதலில் சதாமிடம் இருந்த அணு ஆயுதத்தை பறிக்க என்றே அமெரிக்கா ஈராக்குள் நுழைந்தது. பின் அங்கு சனநாயகம் அமைக்க நிலை கொள்வதாக கூறியது. பின் ISIS குழுவை அழிக்க நிலை கொள்வதாக கூறியது. தற்போது ஈரானை அழிக்க ஈராக் தளங்களை பயன்படுத்துகிறது.
.
அதேவேளை ஈராக் அரசின் அழைப்புக்கு அமைய மட்டுமே ஜெர்மனியின் படைகள் அங்கு நிலைகொள்ளும் என்று ஜெர்மனி கூறியுள்ளது.
.
இறுதியான செய்திகளின்படி ஈரான் தாம் அனைத்து 2015 அணுவாயுத உடன்படிக்கைகளிலும் இருந்தும் விலகுவதாக கூறியுள்ளது. அமெரிக்காவின் ரம்ப் இந்த உடன்படிக்கைகளில் இருந்து 2018 ஆம் ஆண்டு வெளியேறி இருந்தாலும் ஈரான் பெருமளவில் உண்டபடிக்கைக்கு அமையவே இதுவரை செயல்பட்டு வந்தது.
.