ஈரானின் ஜெனரல் Qasem Soleimani யை ஈராக்கில் வைத்து அமெரிக்கா படுகொலை செய்தமைக்கு பதிலடியாக ஈரான் அமெரிக்காவின் உடமைகளை தாக்கினால் தான் உடனே ஈரானின் 52 நிலையங்களை தாங்குவேன் என்று கூறியுள்ளார் அமெரிக்காவின் சனாதிபதி ரம்ப்.
.
அவ்வாறு தாக்கப்படவுள்ள 52 ஈரானிய நிலையங்களை தாம் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாகவும் ரம்ப் கூறியுள்ளார்.
.
1979 ஆம் ஆண்டு ஈரானில் இருந்த அமெரிக்க தூதரக ஊழியர்கள் 52 பேரை கைதிகளாக வைக்கப்பட்டு இருந்தமையாலேயே ரம்ப் 52 நிலையங்களை தாக்கவுள்ளார்.
.
ரம்பின் இந்த மிரட்டல் வெளிவந்து சில நிமிடங்களில் American Federal Depository Library web தாக்குதலுக்கு உள்ளாகியது. அத்துடன் தாக்குதலுக்கு உள்ளன கணனிகளும் மூக்குடைபட்ட வடிவில் ரம்பின் படம் ஒன்றையும் கொண்டிருந்தன.
.
ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக பகுதியில் சனிக்கிழமை சில எறிகணை தாக்குதல்களும் இடம்பெற்று இருந்தது. ஆனால் இந்த தாக்குதல்களுக்கு எவரும் பலியாகவில்லை.
.
ஈரானின் ஜெனரல் படுகொலை செய்யப்பட்டவுடன் ஈரான் தாம் அமெரிக்காவுக்கு பதில் தாக்குதல் வழங்குவது உறுதி என்று கூறியுள்ளது.
.