இன்று ஞாயிறு பங்களாதேஷில் உள்ள Tetulia என்ற இடத்தில் 4.5 C வெப்பநிலை பதியப்பட்டு உள்ளது. அந்நாட்டில் நிலவும் இந்த கடும் குளிருக்கு இதுவரை சுமார் 50 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் சுமார் 4,500 பேர் வைத்தியமும் பெற்றுள்ளனர்.
.
இந்த குளிர் வெப்பநிலை மேலும் சில நாட்களுக்கு தொடரும் என்றும் கூறப்படுகிறது. கடும் புகார் காரணமாக சில விமானங்கள் வேறு பகுதிகளுக்கு திசை திருப்பப்பட்டும் உள்ளன.
.
தலைநகர் டாக்காவில் (Dhaka) இன்று ஞாயிறு வெப்பநிலை 12.5 C ஆக உள்ளது.
.
வசதி குறைந்தவர்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இவர்களின் ஆடைகள் கடும் குளிருக்கு தகுந்தது அல்ல. அங்கு வீடுகளும் கடும் குளிரை கருத்தில் கொண்டு கட்டப்பட்டவை அல்ல.
.
அந்நாட்டின் Chuadanga என்ற இடத்தில் டிசம்பர் 19 ஆம் திகதி வெப்பநிலை 7.9 C ஆக இருந்துள்ளது.
.