அமெரிக்காவில் இராணுவ பயிற்சி பெற்றுவரும் சவுதி அரேபிய வான்படை உறுப்பினன் ஒருவர் வகுப்பறையில் இருந்த 3 அமெரிக்க உறுப்பினர்களை சுட்டு கொலை செய்துள்ளார். அங்கு விரைந்த அமெரிக்க படை அதிகாரிகள் சவுதி மாணவனையும் சுட்டு கொலை செய்துள்ளனர்.
.
அமெரிக்காவின் புளோறிடா (Florida) மாநிலத்தில் உள்ள பென்ஸகோல (Pensacola) என்ற இடத்தில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்திலேயே இந்த சம்பவம் இன்று வெள்ளி காலை 6:51 மணியளவில் இடம்பெறுள்ளது.
.
இந்த சம்பவத்தில் குறைந்தது மேலும் 8 பேர் காயமடைந்தும் உள்ளனர்.
.
Florida Naval Air Station என்ற இந்த தளத்தில் சுமார் 16,000 படையினரும், 7,400 அலுவலகத்தினரும் உள்ளனர்.
.
இரண்டு தினங்களுக்கு முன், புதன்கிழமை, Hawaii தீவில் உள்ள Pearl Harbor கடற்படை தளம் ஒன்றில் இன்னோர் கடற்படையினர் இரண்டு ஊழியரை சுட்டு கொலை செய்து, தானும் தற்கொலை செய்துகொண்டார்.
.