கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரக ஊழியர் ஒருவரை கடத்திய அடையாளம் காணப்படாதோர் தூதரக உண்மைகளை கைக்கொண்டு உள்ளனர் என்கிறது அமெரிக்காவின் The New York Times செய்தி நிறுவனம். இந்த சம்பவம் திங்கள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
.
சுவிஸ் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் Pierre-Alain Eltschinger மேற்படி கடத்தலை உறுதிப்படுத்தி உள்ளார்.
.
மேற்படி கடத்தலை செய்தோர், சுவிஸ் தூதரக ஊழியரான பெண்ணின் தொலைபேசியை unlock செய்ய கூறி, அதில் இருந்த தரவுகளை ஆராய்ந்து உள்ளனர்.
.
இந்த தரவுகளில் அண்மையில் சுவிஸ் நாட்டுக்கு தப்பியோடி அகதியான நபர் ஒருவரின் தரவுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அத்துடன் அவ்வாறு தப்பியோட உதவியவர்கள் தரவுகளும் இருந்ததாக கூறப்படுகிறது.
.
அதே தினம் இலங்கையின் புதிய அரசு சுமார் 700 CID அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதை தடை செய்திருந்தது.
.