மொத்தம் 42 கொள்கலங்கள் நிரம்பிய பொலித்தீன் கழிவுகளை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்புகிறது மலேசியா. இவை சட்டத்துக்கு விரோதமான முறையில் மலேசியாவுக்கு அனுப்பட்டதாக கூறப்படுகிறது. அவற்றை திருப்பி ஏற்றுக்கொள்ள பிரித்தானிய இணங்கி உள்ளது.
.
கடந்த மாதம் சுமார் 300 கொள்கலங்கள் மலேசிய துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டு இருந்தன. பின்னர் வேறுசில நாடுகள் சுமார் 200 கொள்கலங்களை தாம் எடுத்துக்கொண்டன.
.
அண்மை காலம்வரை சீன சுமார் 7 மில்லியன் தொன் கழிவுகளை மேற்கு நாடுகளில் இருந்து பெற்றது. ஆனால் தற்போது சீன கழிவுகளை பெறுவதை நிறுத்திக்கொண்டது. அதனால் தமது கழிவுகளை அப்புறப்படுத்த வழியின்றி தவிக்கின்றன மேற்கு நாடுகள்.
அண்மையில் பெரும் தொகையான கனடிய கழிவுகளை பிலிப்பின் மீண்டும் கனடாவுக்கு அனுப்பி இருந்தது. Recycle பொருட்கள் என்று கூறியே இந்த கழிவுகள் அனுப்பப்பட்டு இருந்தன.
.