இந்தியாவின் வரனாசி (Varanasi) நகரில் உள்ள Banaras Hindu University என்ற பல்கலைக்கழத்தில் சமஸ்கிரதம் படிப்பிக்க நியமிக்கப்பட்ட விரிவுரையாளர் பதவி கிடைத்து சில தினங்களுக்குள் மிரட்டல் காரணமாக தலைமறைவாகி உள்ளார். இவர் ஒரு இஸ்லாமியர் என்றும் அதனால் இவர் இந்து மொழியை படிப்பிக்க முடியாது என்றும் அங்குள்ள இந்துவாத மாணவர் அமைப்பு எதிர்க்கின்றது.
.
Feroz Khan என்ற இந்த இஸ்லாமிய விரிவுரையாளர் சமஸ்கிரத்தில் PhD வரையான கல்வி கற்றவர். அதனால் இவருக்கு மேற்படி பல்கலைக்கழகம் சமஸ்கிரத விரிவுரையாளர் பதவி வழங்கியது.
.
ஆனால் இரண்டு தினங்களின் பின், நவம்பர் 7 ஆம் திகதி, Akhil Bharatiya Vidyarthi Parishad என்ற இந்துவாத மாணவர் குழு இவர் இந்து சமய மொழியை படிப்பிக்க முடியாது என்று கூறி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டது.
.
அதேவேளை சில மாணவர்களும், சில வெளியாரும் மேற்படி விரிவுரைலாருக்கு ஆதரவாக கருத்துக்கள் வெளியிட்டு உள்ளனர். ஆனாலும் பாதுகாப்பு கருதி இவரை தற்போதைக்கு பல்கலைக்கழகம் வரவேண்டாம் என்றுள்ளது நிர்வாகம். விரிவுரையாளரும் தலைமறைவாகி உள்ளார்.
.