ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் பிரித்தானிய படைகள் யுத்தக்குற்ற செயல்களில் ஈடுபட்டனவா என்பதை விசாரணை செய்ய ICC (International Criminal Court) தீர்மானித்துள்ளது. அத்துடன் அதை பிரித்தானிய தவறுகளை மூடிமறைக்க முயன்றதா என்பதையும் ICC ஆராயும்.
.
இன்று திங்கள் BBC செய்தி நிறுவனம் War Crime Scandal Exposed என்ற தலைப்பில் ஒளிபரப்பிய ஆக்கம் ஒன்றின் பின்னரே ICC விசாரணைக்கு முன்வந்துள்ளது.
.
குறிப்பிட்ட சம்பவம் ஈராக்கில் பிரித்தானிய இராணுவம் கொண்டிருந்த Camp Stephen என்ற முகாமிலேயே இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இங்கு 2003 ஆம் ஆண்டில் இரண்டு அப்பாவிகள் மரணித்து இருந்தனர். இவர்கள் இருவரும் அப்பாவி பொதுமக்கள் என்பதை பிரித்தானிய ஏற்றுக்கொண்டுள்ளது.
.
பிரித்தானிய அரசு தாம் சம்பவத்தை விசாரணை செய்ததாகவும், தவறுகள் எதுவும் இடம்பெற்று இருக்கவில்லை என்றும் கூறியுள்ளது.
.