சீனாவின் செய்வாய் கிரகத்துக்கான ஆளில்லா பயண பணிகள் இன்று வியாழன் மேலும் ஒரு படி முன்னேறி உள்ளது. சீனாவின் Hebei மாநிலத்தில் இன்று செய்துகொண்ட பரிசோதனை மூலம் செய்வாயில் பத்திரமாக தரையிறங்கும் முறைகளை உறுதி செய்துள்ளது சீனா. இன்னோர் கிரகத்தில் தரையிறங்கும் கலம் அங்குள்ள இடர்களை தவிர்த்து, தரையில் மோதாது, தரையிறங்கவேண்டும். அவ்வாறான பரிசோதனை ஒன்றையே சீனா இன்று வெற்றிகரமாக செய்துள்ளது.
.
சீனா 2016 ஆம் ஆண்டு செவ்வாய்க்கு ஆளில்லா கலம் ஒன்றை அனுப்பும் பணிகளில் இறங்கியிருந்தது. அடுத்த வருடம் (2020) சீனா ஆளில்லா கலத்தை செவ்வாய்க்கு அனுப்பும் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
.
இந்த கலத்தை காவி செல்லும் ஏவுகணை ஏற்கனவே வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது.
.
இதுவரை ரஷ்யாவும், அமெரிக்காவும் மட்டுமே ஆளில்லா கலம்களை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கி உள்ளன. முதலில் ரஷ்யா 1971 ஆம், 1973 ஆம் ஆண்டுகளில் இரண்டு கலம்களை வெற்றிகரமாக தரையிறங்கி இருந்தது. 1976 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா 8 கலம்களை வெற்றிகரமாக தரையிறக்கி உள்ளது.
.
பூமியில் இருந்து செவ்வாய் செல்ல கலம் ஒன்றுக்கு சுமார் 7 மாதங்கள் தேவை.
.
செவ்வாயில் தரையிறங்காது, செய்மதி போல் வேறுபல கலம்கள் சுற்றியும் வருகின்றன.
.