இலங்கையின் SriLankan விமான சேவை இந்தியாவின் Air India விமான சேவைமூலம் கனடாவின் Toronto நகருக்கு சேவை செய்யவுள்ளது. இந்த சேவை இந்தியாவில் தலைநகர் டெல்கி ஊடாகவே இடம்பெறும். அத்துடன் Toronto வுக்கும் டெல்கிக்கும் இடையிலான சேவையை Air India விமான சேவை code-share மூலம் வழங்கும்.
.
Air India சேவையின் டெல்கி-Toronto flight AI187 SriLankan சேவையின் UL3640 ஆகவும், Toronto-டெல்கி flight AI188 SriLankan சேவையின் UL3641 ஆகவும் இருக்கும்.
.
கொழும்பு-டெல்கி-Toronto சேவைக்கு டெல்கி transit 4 மணித்தியாலமாகவும், மறுதிசையில் 6 மணித்தியாளமாகவும் இருக்கும்.
.
முதலில் புதன், வெள்ளி, ஞாயிரு ஆகிய மூன்று தினங்களில் மட்டுமே இந்த சேவை வழங்கப்படும்.
.