உலகிலேயே அதிகம் மாசடைந்த வளி டெல்கியில்

Delhi_AQI_999
உலகிலேயே அதிகம் மாசடைந்த வளியை கொண்ட நகரமாக இந்தியாவின் தலைநகர் டெல்கி (Delhi) உள்ளது. இன்று ஞாயிறு அந்த நகரின் வளி மாசின் அளவு வளி மாசை அளக்கும் கருவிகளின் உச்ச வாசிப்பையும் மீறி உள்ளது. வளி மாசை அளக்கும் கருவிகள் (Air Quality Index meter) வாசிக்கக்கூடிய அதி உயர் வாசிப்பு 999 ஆகும். ஆனால் இன்று ஞாயிறு அந்த நகரில் உள்ள அனைத்து மாசு அளக்கும் கருவிகளும் 999 வாசிப்புடன் முடங்கி விட்டன.
.
சீன தலைநகரின் மாசிலும் டெல்கி மாசு 7 மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. டெல்கி மாசு மனிதருக்கு புகைபிடிப்புக்கு நிகரான பாதிப்புகளை உருவாக்க வல்லது என்கிறது ஐ.நா. வின் உலக சுகாதார அமைப்பு (WHO)
.
​வளி மாசு காரணமாக குறைத்து 30 டெல்கி சென்ற விமானங்கள் வேறு இடங்களுக்கு திசை திருப்பப்பட்டு உள்ளன.
.
தோட்டக்காரர் பயிர்களை எரிப்பது, தீபாவளி பட்டாசால் ஏற்படும் மாசு, வாகனங்கள் ஏற்படுத்தும் மாசு எல்லாமே டெல்கி வளி மாசடைய காரணம் என்று கூறப்படுகிறது.
.
இந்திய AQI வகைப்படுத்தல்:
AQI வாசிப்பு 0-50: Good
AQI வாசிப்பு 51-100: Satisfactory
AQI வாசிப்பு 101-200: Moderately Polluted
AQI வாசிப்பு 201-300: Poor
AQI வாசிப்பு 301-400: Very Poor
AQI வாசிப்பு 401-500: Severe
.