2012 ஆம் ஆண்டு புரூணை, கம்போடியா, இந்தோனேசியா, லஓஸ், மலேசியா, பர்மா, பிலிப்பீன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்னாம் ஆகிய 10 ASEAN (Association of Southeast Asian Nations) நாடுகளும் சீனா, ஜப்பான், இந்தியா, தென்கொரியா, அஸ்ரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் இணைந்து RECP (Regional Comprehensive Economic Partnership) என்ற சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்க முயற்சி எடுத்தன.
.
அந்த முயற்சி இன்று நவம்பர் 2 முதல் 4 வரை தாய்லாந்தில் இடம்பெறும் வருடாந்த ASEAN மாநாட்டில் முற்று பெறலாம் என்று கருதப்படுகிறது. எல்லா நாடுகளும் இறுதி உடன்படிக்கைக்கு தயார் என்றாலும், இந்தியா சற்று பின்வாங்குகிறது. அதனால் இந்தியா இன்றி RCEP நடைமுறைக்கு வரும் சாத்தியமும் உண்டு.
.
இறுதிவரை மற்றைய 15 நாடுகளும் தாம் இந்தியாவையும் இணைக்க முடிந்ததை செய்வோம் என்றுள்ளன.
.
சுமார் 3.4 பில்லியன் மக்களை கொண்ட இந்த 16 நாடுகளுக்குள் தற்போது உலகின் 39% ($50 டிரில்லியன்) வர்த்தகம் அடங்கி உள்ளது. இந்த வர்த்தக வலயம் 2050 ஆம் ஆண்டளவில் உலகின் 50% வர்த்தகத்தை கொண்டிருக்கும் என்றும் கருதப்படுகிறது.
.
ரம்புக்கு முன் அமெரிக்காவின் தலைமையில், கனடா, மெக்ஸிகோவை உள்ளடக்கி உருவாக இருந்த Trans-Pacific Partnership (TPP) என்ற வர்த்தக வலயத்துக்கு போட்டியாகவே RCEP உருவாகி இருந்தது. ஆனால் பின்வந்த ரம்ப் TPP வர்த்தக வலய முயற்சியில் இருந்து வெளியேறி இருந்தார்.
.