அண்மையில் பிரித்தானியா சென்ற லாரி கொள்கலம் ஒன்றுள் மரணித்தோர் அனைவரும் வியட்னாம் நாட்டவர் என்று தெரியவந்துள்ளது. முதலில் இவர்கள் சீனர்கள் என்று கருதப்பட்டு இருந்தாலும், பொலிஸாரின் விசாரணைகள் மரணித்தோர் வியட்னாம் நாட்டினர் என்பதை உறுதி செய்துள்ளது.
.
மரணித்தோரின் சில குடும்ப உறவினர்கள் ஏற்கனவே மரணித்த தமது உறவுகள் தொடர்பான விபரங்களை வெளியிட்டு, போலீசாருக்கும் தேவையான தகவல்களை வழங்கி உள்ளனர்.
.
உறவினர் வழங்கிய தரவுகளின்படி மரணித்தோருள் Pham Thi Tra My என்ற 26 வயது பெண், Le Van Ha என்ற 30 வயது ஆண் ஆகியோரும் அடங்குவர்.
.
இந்த வாகனத்தின் சாரதியான Maurice Robinson என்பவரும், Eamonn Harrison என்பவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளனர். நெதர்லாந்து குடியிருப்பாளர்களான Ronan Hughes, Christopher Hughes ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
.