ஜம்மு-காஸ்மீர் இரண்டாக பிரிப்பு

Kashmir

ஜம்மு-காஸ்மீர் மாநிலத்தை இரண்டு பிரதேசங்களாக (federal territories) பிரித்து மத்திய அரசின் கடுப்பாட்டுள் கொண்டுவர இந்தியா நடவடிக்ககை எடுத்துள்ளது. நாளை வியாழன் இந்த நடவடிக்கை நடைமுறை செய்யப்படும்.
.
மோதி தலைமயிலான பா. ஜ. கட்சி ஏற்கனவே முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு-காஸ்மீர் மாநிலத்தின் விசேட சலுகைகளை பறித்து உள்ளது.
.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஜம்மு-காஸ்மீர் பகுதி ஒன்றாகவும், புத்த சமயத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தீபெத் எல்லையோரம் உள்ள Ladakh பகுதியை இன்னொன்றாகவும் மத்திய அரசு நேரடி கடுப்பாட்டுள் எடுத்துள்ளது.
.
இந்த நகர்வுக்கு முன்னோடியாக இந்தியா பெருமளவு படையினரை அங்கு குவித்துள்ளது. மத்திய அரசு ஜம்மு-காஸ்மீர் பகுதில் தொலைத்தொடர்புகளையும் பெருமளவு கட்டுப்படுத்தியுள்ளது.
.
மோதியின் மாநிலமான குயாராத்தை சார்ந்த Murmu என்பவர் ஜம்மு-காஸ்மீர் பகுதியின் முதல் ஆளுநர் ஆகவும், Radha Krishna Mathur என்பவர் Ladakh பகுதியின் முதல் ஆளுநர் ஆகவும் நியமிக்கப்பட உள்ளனர்.
.