பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற மேலும் 3 நாட்கள் மட்டும் இருக்கையில், இந்த நாடகத்தில் மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க இரு தரப்பும் இணங்கி உள்ளன. அதன்படி பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லை 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆக நீடிக்கப்பட்டு உள்ளது.
.
தற்போதுவரை இருந்த கால எல்லையான அக்டோபர் 31 ஆம் திகதியை நீடிக்கும் நிலை தோன்றின் பதிலுக்கு தான் தெருவோரம் செத்துக்கிடக்கலாம் என்று கூறிய பிரதமர் ஜான்சன் தற்போதைய 3 மாதகால நீடிப்பை ஏற்றுக்கொண்டுள்ளார்.
.
பிரான்ஸ் இதுவரை புதிய 3 மாத கால நீடிப்பை எதிர்த்து இருந்தாலும், தற்போது ஜனவரி 31 ஆம் திகதிவரை வெளியேற்றத்தை நீடிக்க இணங்கி உள்ளது.
.
ஜான்சன் வெளியேற்றத்துக்கான தீர்வு ஒன்றை நடைமுறை செய்ய முடியாத நிலையில், வரும் டிசம்பர் மாதம் பிரித்தானியாவில் ஒரு பொது தேர்தலும் இடம்பெறலாம். ஆனால் அவ்வாறான தேர்தலும் ஒரு தீர்வுக்கு வழிசெய்யும் என்றில்லை.
.
முயற்சிகள் பலன் அளிக்காவிடில் ஜனவரி 31 இல் மீண்டும் ஒரு நீடிப்பு இடம்பெறலாம்.
.