லாரிக்குள் 39 சடலங்கள், Essex சம்பவம்

Essex

பிரித்தானியாவின் Essex பகுதில் உள்ள Waterglade Industrial Park என்ற பகுதில் லாரி ஒன்றுடன் பொருத்தப்பட்டு இருந்த கொள்கலம் (container) ஒன்றிலிருந்து 39 சடலங்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் Mo Robinson என்ற 25 வயதுடைய சாரதியும் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
.
பெல்ஜியத்தில் இருந்து வந்த இந்த வண்டி, தேம்ஸ் ஆற்றினூடாக Essex பகுதிக்கு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வண்டி பல்கேரியாவில் (Bulgaria) பதிவு செய்யப்பட்ட வண்டி என்கிறது பல்கேரியா. இந்த வண்டி குளிரூட்டி கொண்ட ஓர் வண்டியாகும்.
.
பெரும்பாலும் மரணித்தவர்கள் வேறு நாடுகளில் இருந்து ஐரோப்பா வரும் அகதிகளாகவே இருப்பர் என்று கருதப்படுகிறது.
.
2014 ஆம் ஆண்டு இப்பகுதிக்கு container ஒன்றில் வந்திருந்த 35 ஆப்கானிஸ்தான் அகதிகளில் ஒருவர் பலியாகி இருந்தார்.
.