உயர் 10% வருமானத்துள் தற்போது அதிக சீனர்

US_China

முதல் முறையாக உலகின் உயர் 10% செல்வந்ததை கொண்டோரின் பட்டியலில் அமெரிக்கரை பின்தள்ளி பெருமளவு சீனர் தற்போது இடம்பெறுள்ளனர்.
.
தற்போது உலகின் உயர் 10% செல்வந்ததை கொண்ட அமெரிக்கரின் தொகை 99 மில்லியன் ஆகும். ஆனால் அவ்வகை வருமானம் கொண்ட சீனர்களின் தொகை 100 மில்லியன் ஆக உயர்ந்து உள்ளது.
.
தற்போது $109,430 செல்வந்தம் கொண்டோர் உயர் 10% வருமானம் கொண்டோர் பட்டியலில் அடங்குவர். அதேவேளை $936,430 செல்வந்தம் கொண்டோர் உயர் 1% பட்டியலில் அடங்குவர்.
.
சீனாவில் வருமானம் வேகமாக வளர்ந்தாலும் தற்போதும் அமெரிக்கர் ஒருவரின் சராசரி வருமானம் வருடத்துக்கு $66,000 ஆகவும், சீனர் ஒருவரின் வருமானம் $21,000 ஆகவுமே உள்ளது. அத்துடன் அமெரிக்காவில் உள்ள millionaires தொகை 18.6 மில்லியன் ஆகவும், சீனாவில் உள்ள  millionaires தொகை 4.4 மில்லியன் ஆகவுமே உள்ளது.
.