காஸ்மீர் பகுதில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருபகுதிக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி சூடுகளுக்கு குறைந்தது 10 பேர் பலியாகி உள்ளனர். இன்று ஞாயிரு இடம்பெற்ற வன்முறைகளுக்கு இருதரப்பும் மற்றைய தரப்பை காரணம் கூறியுள்ளனர்.
.
இந்திய படைகளின் பேச்சாளர் Jajesh Kalia தனது கூற்றில் பாகிஸ்தான் இராணுவமே 2003 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்திருந்த சமாதான உடன்படிக்கையை மீறி, இந்திய காவல் அரண்களை நோக்கி சுட்டதாக கூறியுள்ளார். தமது பதில் சூட்டுக்கு குறைந்தது 6 பாகிஸ்தான் படையினரும் அதேயளவு பயங்கரவாதிகளும் பலியானதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.
.
ஆனால் பாகிஸ்தான் இராணுவம் தனது அறிக்கையில் காரணம் இன்றி இந்திய இராணுவம் சுட்டதில் பாகிஸ்தான் தரப்பில் 1 படையினரும், 5 பொதுமக்களும் பலியாகி உள்ளதாக கூறியுள்ளது.
.
அதேவேளை இந்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை பிரித்தானியாவின் லண்டன் நகரில் வரும் தீபாவளி தினத்தன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதை லண்டன் முதல்வர் Sadiq Khan நிறுத்துமாறு கேட்டுள்ளார்.
.