இன்று வெள்ளி ஆப்கானிஸ்தான் மசூதி ஒன்றில் இடம்பெற்ற குண்டு தாக்குதலுக்கு குறைந்தது 62 பேர் பலியாகி உள்ளனர். அத்துடன் குறைந்தது 36 பேர் காயமடைந்தும் உள்ளார். தாக்குதல் இடம்பெற்ற மசூதி உள்ள மாநிலம் பாகிஸ்தான் எல்லையோரம் உள்ளது.
.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கொண்டாடவில்லை. இப்பகுதியில் தலபானும், ISIS குழுவும் வெளிப்படையாக செயல்படுகின்றன.
.
ஐ. நா. கணிப்புப்படி ஆப்கானிஸ்தானில் ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மூன்று மாத காலத்தில் 1,174 பொதுமக்கள் தாக்குதல்களுக்கு பலியாகி உள்ளார்.
.
ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்கு அங்கு 162 பேர் பலியாகி இருந்தனர். ஆகஸ்ட் 18 ஆம் திகதி தாக்குதலுக்கு 92 பேர் பலியாகி இருந்தனர். ஆகஸ்ட் 11 ஆம் திகதி தாக்குதலுக்கு 13 பேர் பலியாகி இருந்தனர்.
.