மலேசியாவில் 7 புலி ஆதரவாளர் கைது

Malaysia

மலேசியா தாம் 7 விடுதலை புலிகளின் ஆதரவாளர்களை கைது செய்துள்ளதாக இன்று வியாழன் கூறியுள்ளது.
.
இவர்களை புலிகளுக்கு ஆதரவு வழங்கியமை, பிரச்சாரம் செய்தமை, ஆள் திரட்டியமை, நிதி சேகரித்தமை போன்ற காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக மலேசியாவின் பயங்கரவாத தடுப்பு உயர் அதிகாரி Ayob Khan Mydin Pitchay கூறியுள்ளார்.
.
கைது செய்யப்பட்டோருள் இரண்டு மலேசிய அரசியல்வாதிகளும் அடங்குவர். Democratic Action Party என்ற கட்சியை சார்ந்த இவர்கள் கடந்த வருட மாவீரர் விழாவில் கலந்துள்ளனர். இந்த கட்சி தற்போதை ஆளும் கூட்டணியில் அங்கம் கொண்ட கட்சியாகும்.
.
இன்னோர் 38 வயது சந்தேகநபர் மலேசியாவில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டார் என்ற காரணத்தினால் கைது செய்யப்பட்டு உள்ளார்.
.
2014 ஆம் ஆண்டு முதல் LTTE ஒரு பயங்கரவாத இயக்கமாக மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
.