துருக்கி முன்னர் கூறியபடி சிரியாவில் உள்ள Kurdish ஆயுத குழுவான SDF (Syrian Democratic Forces) மீது இன்று புதன் தாக்குதலை ஆரம்பித்து உள்ளது. அமெரிக்க சனாதிபதி ரம்பின் எச்சரிக்கையை கணக்கில் எடுக்காது துருக்கி தாக்குதலை ஆரம்பித்து உள்ளது.
.
கடந்த கிழமை வரை இப்பகுதியில் நிலைகொண்டிருந்த அமெரிக்க படைகள் SDF குழுவுக்கு பாதுகாப்பை வழங்கி வந்துள்ளன. ஆனால் ரம்ப் கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க படைகளை அப்பகுதியில் இருந்து திடீரென பின்வாங்கி இருந்தார்.
.
துருக்கி SDF குழுவை ஒரு பயங்கரவாத குழுவாக நோக்கும் அதேநேரத்தில் அமெரிக்கா SDF குழுவுடன் நீண்ட காலமாக இணைந்து செயல்பட்டு வந்துள்ளது.
.
இந்த தாக்குதல் மூலம், துருக்கி-சிரியா எல்லையோரம், 32 km அகல, 480 km நீள பாதுகாப்பு வலயம் ஒன்றை அமைக்கவுள்ளதாக துருக்கி கூறியுள்ளது. அங்கு தற்போது துருக்கியில் உள்ள அகத்துக்களுள் 1 மில்லியன் பேரை குடியமர்த்த உள்ளதாகவும் துருக்கி கூறியுள்ளது.
.