சென்னைக்கு தெற்கே உள்ள மாமல்லபுரம் என்ற தமிழ்நாட்டு கரையோர நகரில் இந்திய பிரதமர் மோதியும், சீன சனாதிபதி சீயும் சந்திக்கவுள்ளனர். இந்த சந்திப்பு ஒரு informal சந்திப்பு என்றாலும், இவர்களின் உரையாடல் இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பல விசயங்களை உள்ளடக்கும். சீ வெள்ளிக்கிழமை (அக்டோபர் 11) சென்னை வருகிறார்.
.
ராஜ ராஜ சோழன் காலத்தில் (960 – 1279) தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையில் தொடர்புகள் இருந்ததாக கூறப்படுகிறது. சீன கோவில் என்ற புத்த கோவில் ஒன்று நாகப்பட்டினத்தில் 15ஆம் நூற்றாண்டுவரை இருந்ததாக கூறப்படுகிறது.
.
Xiaomi, Vivo, OPPO உட்பட சுமார் 1,000 சீன நிறுவனங்கள் இந்தியாவில் சுமார் 200,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளன என்று கூறப்படுகிறது. அதில் 5G தொடர்பான தொழில்களும் அடங்கும்.
.
சீனாவின் Huawei நிறுவனத்தின் 5G தொழில்நுட்பத்தை இந்தியாவில் தடை செய்யுமாறு அமெரிக்கா இந்தியாவை அழுத்தி வருகிறது. ஆனால் இந்தியா இது தொடர்பாக எந்த தீர்மானத்தையும் இதுவரை எடுக்கவில்லை.
.