இலங்கையில் பிறந்து கனடா சென்ற நிசான் துரையப்பா என்பவர் Toronto நகரை அண்டியுள்ள Peel பகுதியின் (Peel Region) தலைமை போலீஸ் அதிகாரியாக அக்டோபர் முதல் பணியாற்றவுள்ளார்.
.
இலங்கையில் இருந்து கனடா வந்த இவர் University of Toronto வில் BA கல்வி பயின்றவர். இவர் 1995 ஆம் ஆண்டில் அண்மையில் உள்ள Halton Regional பகுதி போலீஸ் சேவையில் தனது காவல்துறை பணியை ஆரம்பித்து இருந்தார். 2015 ஆம் ஆண்டில் அப்பகுதியின் Deputy Chief ஆக பணியை ஆரம்பித்து இருந்தார்.
.
தற்போது இவர் Halton பகுதிக்கு அண்மையில் உள்ள Peel பகுதி போலீஸ் சேவையில் இணைந்துள்ளார். Peel பகுதி Missisauga, Branmpton, Caledon ஆகிய மூன்று நகரங்களை கொண்டது.
.
Toronto நகரை போலவே Peel பகுதியும் பெருமளவு தென் ஆசியர்களை கொண்ட பகுதியாகும்.
.