இந்தியாவில் மீண்டும் வெங்காய தட்டுப்பாடு

India-Onion

இந்தியாவில் மீண்டும் வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அண்மையில் வெங்காயம் பயிரிடப்பட்ட இந்திய பகுதிகளில் மிதமிஞ்சிய மழை பொழிந்தால் வெங்காய பயிர்கள் வெள்ளத்துள் அமிழ்ந்து அழிந்துள்ளன. அதனாலேயே இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
.
தட்டுப்பாட்டின் விளைவால் உருவாகும் வெங்காய விலை உயர்வை தடுக்கும் நோக்கில் இந்தியா வெங்காய ஏற்றுமதியை இடைநிறுத்தி உள்ளது.
.
தற்போது இந்தியாவில் வெங்காய விலை இறாத்தல் ஒன்றுக்கு சுமார் 60 முதல் 80 ரூபாய் ($1.10) ஆக உள்ளது. சில மாதங்களுக்கு முன், உற்பத்தி அதிகரிப்பால், அங்கு இறத்தல் சில ரூபாய்களாக மட்டுமே இருந்தது.
.
ஏற்றுமதி தடையால் இந்திய வெங்கயத்தில் தங்கி உள்ள நாடுகளிலும் விலை அதிகரிக்கலாம். பங்களாதேசம் தனது வெங்காய இறக்குமதில் 60% த்தை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்கிறது.
.