இந்திய பிரதமர் மோதி அமெரிக்காவின் ரெக்சாஸ் மாநிலத்து ஹியூஸ்ரன் (Houston) நகருக்கு இந்த கிழமை இறுதியில் வருகிறார். இந்த கிழமை ஐ.நா. அமர்வுக்கு நியூ யார்க் நகரம் வரும் மோதி கூடவே Houston நகருக்கும் இந்தியர்களை சந்திக்க வருகிறார்.
.
மோதி வரவுள்ள 50,000 ஆசனங்கள் கொண்ட அரங்கு நிரம்பும் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் பல பாகங்களிலும் இருந்து இந்தியர்கள், குறிப்பாக பா.ஜ கட்சி ஆதரவாளர் Houston வருகின்றனர்.
.
மோதி ஆதரவாளர் மட்டுமன்றி, எதிர்ப்பாளரும் கூடவே Houston செல்கிறார்கள். இவர்களுள் பாகிஸ்தானியர், இந்தியார் ஆகியோரும் அடங்குவர். அண்மையில் காஸ்மீர் மாநிலத்து உரிமைகளை பறித்தது எதிர்ப்பாளரின் முக்கிய கருவாக இருக்கும்.
.
ஜனாதிபதி ரம்பும் பிரதமர் மோதியுடன் Houston வரலாம் என்றும் சிலரால் கூறப்படுகிறது. ரம்ப் Houston வரின், அவரும் கூடவே தனது எதிர்ப்பு ஊர்வலங்களை எடுத்து வருவார். இவர்கள் இருவரும் நியூ யார்க்கில் சந்திப்பது உறுதியாகியுள்ளது.
.