ரம்ப் நிராகரித்த தலபான் ரஷ்யாவில்

Afhanistan

அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி ரம்ப் தலபானுடனான தனது இரகசிய பேச்சுவார்த்தையை முறித்த பின், தலபான் ரஷ்யா சென்றுள்ளது. ரஷ்யாவின் அரச செய்தி நிறுவனமான Tass செய்திப்படி தலபானின் பேச்சாளர் Suhil Shaheen தலைமயிலான குழு ஒன்று இன்று வெள்ளி ரஷ்ய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
.
ரம்ப் தலபானுடன் இரகசிய பேச்சுவார்த்தையை நிகழ்த்த இருந்திருந்தும், பின் இறுதி நேரத்தில் முறித்து கொண்டார். அண்மையில் காபூலில் இடம்பெற்ற தாக்குதலை தாமே செய்ததாக தலபான் அறிவித்ததே காரணம். அந்த தாக்குதலில் ஒரு அமெரிக்கரும் பலியாகி இருந்தார்.
.
Cold-War காலத்தில் ஆப்கானிஸ்தானில் இருந்த ரஷ்ய படைகளை விரட்ட அப்போதைய முஜாகுதீனுக்கு அமெரிக்கா பாகிஸ்தான் மூலம் உதவியிருந்தது. அதே முஜாகுதீன் பின்னர் தலபான் ஆகியது. அதில் சிலர் அல்கைடா ஆகினார். அந்த அல்கைடா 9/11 தாக்குதலை செய்திருந்தது.
.